வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் அசோக் என்ற யானை வளர்ந்து வந்தது. இந்த யானையை ஆறுமுகம் என்ற பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில் யானை தாக்கியதில் யானைப்பாகன் ஆறுமுகம் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இறுதியில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்துள்ளது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.