Advertisment

யாரு எங்க வழியை மறைத்தது...? - சுவர்களைத் துவம்சம் செய்த யானைகள்..!

Elephant broke wall near Erode

Advertisment

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி புலிகள்காப்பகமாகச்செயல்பட்டு வருகிறது. இந்த வனத்தில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில்,பவானி சாகர்வனப்பகுதியிலிருந்து,பவானி சாகர்அணையில் உள்ள தண்ணீர் குடிப்பதற்காகவும் அந்த நீரில் குளியல் போட்டு மகிழவும் யானைகள் கூட்டம் கூட்டமாக அங்கு வருவது வழக்கம்.அதைப்போல27ந் தேதி இரவுபவானி சாகர்அணையின் மேல் பகுதிக்கு வந்தயானைக்கூட்டம் அருகே ஓடும் வாய்க்கால் வழியாகபவானி சாகர்அணை பூங்காவுக்குள் நுழைந்தது. பிறகு உள்ளே சென்ற யானைகள் அந்த பூங்காவிலிருந்து வெளியே வர வழி தெரியாமல் பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவின் இரும்புக் கதவுகள் மீது ஆக்ரோஷமாக மோதிஅவற்றைச்சேதப்படுத்தி அதன் மூலம் வெளியே வர வழி ஏற்படுத்தி யானைகள் வெளியேறியது.

இதைக்கண்ட பூங்காவில் இருக்கும் இரவு நேர பொதுப்பணித்துறை பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி விட்டனர். மொத்தம் நான்கு இடங்களில் சுற்றுச்சுவர்கள் மற்றும் இரும்புக் கதவுகளை உடைத்து துவம்சம் செய்தது யானைகள். பிறகுபவானி சாகர்வனத்துறைக்குத்தகவல் சென்ற பிறகு மேலும் யானைகள் பூங்காவில் நுழையாதவாறு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

elephant Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe