Skip to main content

யாரு எங்க வழியை மறைத்தது...? - சுவர்களைத் துவம்சம் செய்த யானைகள்..!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Elephant broke wall near Erode

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி புலிகள் காப்பகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வனத்தில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

 

இந்த நிலையில், பவானி சாகர் வனப்பகுதியிலிருந்து, பவானி சாகர் அணையில் உள்ள தண்ணீர் குடிப்பதற்காகவும் அந்த நீரில் குளியல் போட்டு மகிழவும் யானைகள் கூட்டம் கூட்டமாக அங்கு வருவது வழக்கம். அதைப்போல  27ந் தேதி இரவு பவானி சாகர் அணையின் மேல் பகுதிக்கு வந்த யானைக் கூட்டம் அருகே ஓடும் வாய்க்கால் வழியாக பவானி சாகர் அணை பூங்காவுக்குள் நுழைந்தது. பிறகு உள்ளே சென்ற யானைகள் அந்த பூங்காவிலிருந்து வெளியே வர வழி தெரியாமல் பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவின் இரும்புக் கதவுகள் மீது ஆக்ரோஷமாக மோதி அவற்றைச் சேதப்படுத்தி அதன் மூலம் வெளியே வர வழி ஏற்படுத்தி யானைகள் வெளியேறியது. 

 

இதைக் கண்ட பூங்காவில் இருக்கும் இரவு நேர பொதுப்பணித்துறை பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி விட்டனர். மொத்தம் நான்கு இடங்களில் சுற்றுச்சுவர்கள் மற்றும் இரும்புக் கதவுகளை உடைத்து துவம்சம் செய்தது யானைகள். பிறகு பவானி சாகர் வனத்துறைக்குத் தகவல் சென்ற பிறகு மேலும் யானைகள் பூங்காவில் நுழையாதவாறு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

 


சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.