Advertisment

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Advertisment

Elementary Education Diploma Exam - Apply Today!

முதலாம், இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் இன்றுமுதல் (07.08.2021) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூபாய் 50, மதிப்பெண் சான்று (முதலாம்) ரூபாய் 100, (இரண்டாம்) ரூபாய் 100 செலுத்த வேண்டும். பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூபாய் 15, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூபாய் 50 ஆகியவற்றை மாணவர்கள் செலுத்த வேண்டும்.

Advertisment

முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், இரண்டாமாண்டு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரையும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு நடைபெறுகிறது.

apply now exam students
இதையும் படியுங்கள்
Subscribe