மின்னணு வாக்காளர் அடையாள அட்டை..!

Electronic Voter ID Card ..!

தமிழக சட்டமன்றத் தேர்தலை மே.5ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.20 அல்லது 21ல் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.

தேசிய வாக்காளர் தினமான இன்று (25.01.2021)தேர்தல் கமிஷன் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும்.அவர்கள் தங்களது செல்ஃபோன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள, செல்ஃபோன் எண்ணை பதிவு செய்த பழைய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம்பெற்றிருக்கும் என்றும், ‘கியூ ஆர் கோடு’ பயன்பாட்டை கொண்டதாக அந்த அட்டை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

election commission
இதையும் படியுங்கள்
Subscribe