Advertisment

பறிபோன சிறுவனின் உயிர்; உறியடி நிகழ்வில் ஏற்பட்ட சோகம்

 electrocution; Tragedy in the Uriati incident

ராமநாதபுரம் பரமக்குடி அருகே உறியடி விளையாட்டின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மேலாயக்குடியில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி விழா நடைபெற்றது. மேலயாக்குடியைச் சேர்ந்த முருகன் என்பவர் தன்னுடைய இரண்டு மகன்களுடன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது முருகனின் மகன்கள் கோகுல ராகுல், கபினேஷ் உறியடி கயிற்றை இழுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக உறியடி பானை கட்டப்பட்டிருந்த கம்பி அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதி மின்சாரம் தாக்கி கோகுல ராகுல் மற்றும் கபினேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

Advertisment

இருவரும் உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில்முருகனின் ஏழு வயது மகன் கபினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோகுல ராகுல் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறியடி விழாவின் பொழுது எதேச்சையாக யாரோ ஒருவர் எடுத்தவீடியோ கட்சியில் அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் இணையத்தில் தற்போதுவைரலாகி வருகிறது.

Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe