Advertisment

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு-வெளியான முழு விவரங்கள்

Electricity tariff hike in Tamil Nadu – Full details released

Advertisment

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜீரோ முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 காசுகள் இருந்த கட்டணம் ரூ.4.80 காசுகளாக உயர்ந்துள்ளது. 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.15 காசுகள் இருந்த கட்டணம் ரூ. 6.45 காசுகளாக உயர்ந்துள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.15 காசுகள் இருந்தகட்டணம் ரூ. 8.55 காசுகளாக உயர்ந்துள்ளது. 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 9.20 காசுகளாக இருந்த கட்டணம், ரூ. 9.65 காசுகளாக உயர்ந்துள்ளது.

801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 10.20 காசுகளாக இருந்த கட்டணம் ரூபாய் 10.70 காசுகளாக உயர்ந்துள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11.25 காசுகளாக இருந்த கட்டணம், 11 ரூபாய் 80 காசுகளாக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் 15 காசுகளில் இருந்து 8 ரூபாய் 55 காசுகளாக அதிகரித்துள்ளது. கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 35 காசுகளில் இருந்து 9 ரூபாய் 80 காசுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் 15 காசுகளில் இருந்து 8 ரூபாய் 55 காசுகளாக உயர்ந்துள்ளது.

ஐம்பது யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் 9 ரூபாய் 70 காசுகளில் இருந்து 10 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவனமின்கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் 65 காசுகளில் இருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில், ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் 65 காசுகளிலிருந்து எட்டு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் 60 பைசாவிலிருந்து காசுகளில் இருந்து, 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 8 ரூபாய் 70 காசுகளிலிருந்து 9 ரூபாய் 10 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 7 ரூபாய் 65 காசுகளில் இருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனம், மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் 7 ரூபாய் 15 காசுகளில் இருந்து 7 ரூபாய் 50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 12 ரூபாய் 25 காசுகளில் இருந்து 12 ரூபாய் 85 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள டான்ஜெட்கோ, 200யூனிட் வரை 63 லட்சம் பேருக்கு மாதம் ஐந்து ரூபாய் மட்டுமே மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 200-ல் இருந்து 300யூனிட்வரை 35 லட்சம் பேருக்கு மாதம் 15 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்ந்துள்ளது. 300 இருந்து 400யூனிட்வரை 25 லட்சம் பேருக்கு மாதம் 25 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. 400 முதல் 500யூனிட்வரை 13 லட்சம் பேருக்கு மாதம் 40 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்ந்துள்ளது எனவும்அறிவித்துள்ளது.

TNGovernment electicity
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe