திருவெறும்பூர் அருகே உள்ள மேலே குமரேசபுரத்தை சேர்ந்தவர் முருகையா மகன் ரஜினி (எ) கருப்பையா தனது நண்பன் ரஞ்சித்தோடு டூவிலரில் கீழே குமரபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் வழிமறித்து ரஜினியை கொலை செய்துவிட்டு ரஞ்சித்தையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தமுடைய குற்றவாளிகள் காரில் தப்பிச் செல்வதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அந்த காரை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் மடக்கி பிடித்தனர்.

Electricity officer who went to jail in Rowdy attacking case

Advertisment

அந்த காரில் இருந்த நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த குருபாகரன் ( 46), மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்தி (23), கைலாசபுரம் வ உ சி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் (22), குரு பாகரனின் மனைவி நித்தியா (40) இவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். காட்டூர், வின் நகர் 4வது தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ்குமார் (ஏ குட்டி ஆகிய 5 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisment

Electricity officer who went to jail in Rowdy attacking case

அவர்களிடம் திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் ரஜினியின் சொந்த ஊர் கள்ள பெரம்பூர் என்றும் அங்கு ரஜினி மீன் பண்ணை வைத்துள்ளதாகவும் இந்நிலையில் ரஜினிக்கும் குருபாகரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பு இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் ரஜினியின் மீன் பண்ணையில் குருபாகரன் தன்னை ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ளும்படி கூறியதாகவும் அதன் அடிப்படையில் குருபாகரனிடமிருந்து ரஜினி சிறிது சிறிதாக 3 லட்சம் வரை பணம் வாங்கி விட்டதாகவும் இந்நிலையில் மீன் பண்ணை தொழில் நலிவடைந்தாகவும்.

Electricity officer who went to jail in Rowdy attacking case

அதனால குருபாகரன் தனது பங்கு தொகையை திரும்ப தருமாறு ரஜினியிடம் கேட்டதாகவும் அதனால் ரஜினி தன்னிடம் பணம் இல்லை என்றும் வேண்டும் என்றால் தன்னிடமுள்ள காரை வைத்துக் கொள்உனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு காரை மீட்டு கொள்வதாக கூறியுள்ளார்.

ஆனால் ரஜினி பணத்தை கொடுக்கவில்லை இந்நிலையில் குருபாகரன் ரஜினியிடம் பணம் கேட்டதற்கு என்னிடம் பணம் இல்லை என்றும் அதனால் காரை கொடு வேண்டுமென்றால் அந்த காரை விற்று விட்டு பணம் தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில் குருபாகரன் ரஜினியிடம் அந்த காரை கொடுத்துள்ளார். ரஜினி அந்த காரை விற்றுள்ளார் ஆனால் குருபகரனுக்கு உரிய பணத்தை கொடுக்கவில்லை.

Electricity officer who went to jail in Rowdy attacking case

இதனால் இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினி குருபரனின் மனைவி நித்யா வித்தியாவிற்கு போன் செய்து தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து நித்யா தனது கணவன் குருபாகரனிடம் ரஜினி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் பணம் போனால் போகட்டும் ஆனால் ரஜினியை விட கூடாது என்று தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும் அதன் அடிப்படையில் ரஜினியை தீர்த்து கட்டியதாகவும் சசிகுமார் ரஜினி மொபட்டில் வருவது குறித்து தகவல் சொல்லி அதன் அடிப்படையில் வந்து வெட்டி விட்டு தப்பி செல்லும் பொழுது போலீசார் பிடித்து விட்டதாகவும் பரபரப்புவாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற சிலரை திருவெறும்பூர் போலீசார் தேடிவருகின்றனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Electricity officer who went to jail in Rowdy attacking case

ரவுடி கொலை வழக்கில் ஒரு பெண் மின்சார வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக அவரை கைது செய்தார்கள் எனவிசாரித்த போது.. கொலை நடந்த இடத்தில் மின்சார வாரிய அதிகாரி இல்லை என்ற பொழுதிலும் அவர் மீது வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பியது போலிஸ் திட்டமிட்டு வழக்கு பதிந்துள்ளார்களாம். கொலை செய்த கொலையாளிகள் மின்சார வாரிய அதிகாரிக்கு தகவல் சொன்னதால் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளளோம் என்கிறார்கள் போலிசார்.