திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனியார் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். இந்த பேருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதியில் சென்றபோது டீ குடிப்பதற்காக பேருந்தை சாலையில் ஓரமாக நிறுத்தியுள்ளனர்.
அங்குத் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் பேருந்து உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து அகல்யா (வயது 20) என்ற பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் மின்சாரம் தாக்கி பெண் பக்தர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.