/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3085.jpg)
தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு லட்சமாவது விவசாயிக்கு மின் இணைப்பினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். காணொளிக் காட்சி மூலம் தமிழகத்தில் அனைத்து மின்வாரிய டிவிஷன்கள் வாரியாக திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முதலமைச்சரின் உரையை விவசாயிகள் நேரலையில் கண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_885.jpg)
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த காணொளிக்காட்சி முகாமில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். அதுபோல் வத்தலக்குண்டு மின் பகிர்மான கழகம் சார்பில் 650 பயனாளிகள் என்ற போதிலும் நிகழ்ச்சியில் இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்திருந்த விவசாயிகளை மின்வாரிய ஊழியர்கள் ஆர்வமாக வரவேற்றனர். அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மின் செயற் பொறியாளர் மூர்த்தி, செலவழித்து வந்த விவசாயிகளுக்கு தாம்பூலப்பை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)