Electricity charges to increase from today; Decision taken after consultation meeting

தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment

இதற்கு முன் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தால் இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதிச்சுமையை சமாளிக்கும் வண்ணம் தற்போது இந்த கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் 2027 வரை இந்த புதிய மின்கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிய மின்சாரமாக குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுதலங்கள் முதலிய பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக வசூலிக்கப்படும்.இரு மாதங்களுக்கு 300 யூனிட் வரை பயன்படுத்தினால் கூடுதலாக 145 ரூபாயும், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 295 ரூபாய் வசூலிக்கப்படும். இதே போல் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தினால் கூடுதலாக 595 ரூபாய் வசூலிக்கப்படும். 600 யூனிட் வரை பயன்படுத்தினால் கூடுதலாக 310 ரூபாய் வசூலிக்கப்படும். 700 யூனிட் வரை பயன்படுத்தினால் கூடுதலாக 550 ரூபாய் வசூலிக்கப்படும். 800 யூனிட் வரை பயன்படுத்தினால் கூடுதலாக 790 ரூபாய் வசூலிக்கப்படும். 900 யூனிட் வரை பயன்படுத்தினால் கூடுதலாக 1130 வரை வசூலிக்கப்படும்.