Skip to main content

மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து அளித்த எம்.எல்.ஏ.!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
Electricity Board Employees



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு, பகல் பராமல் பணிகளில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி. 
 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம் கிராமங்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது.
 

 இப்பகுதி ஜமாத் சார்பில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களுக்கும் உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
 

 இப்பகுதிக்கு மின் இணைப்பை கொடுப்பதற்காக இரவு - பகலாக மின் வாரிய ஊழியர்கள் பாடுபடுவதை மக்கள் கண்கூடாக பார்த்து வியந்தனர்.


 

Electricity Board Employees


அவர்களின் கடமை உணர்வை போற்றி, கட்டிமேடு - ஆதிரங்கம் ஜமாத்தினர், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின்பு, மின் வாரிய ஊழியர்கள் 75 பேரை, பள்ளி வாசலுக்கு வரவழைத்து அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, பிரியாணி விருந்தும் அளித்தும் சிறப்பித்தனர்.


எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி அனைவருக்கும் பிரியாணியை பரிமாறி, அவர்களின் தொண்டுக்கு நன்றி கூறினார்.  இந்த நெகிழ்வான ஏற்பாட்டை செய்த தற்காக. ஜமாத்தையும் பாராட்டினார்.

 

எங்கள் வாழ்நாளில் இந்த அன்பை மறக்கவே மாட்டோம் என அந்த மின் ஊழியர்கள் நெகிழ்ந்து விட்டனர். அவர்கள் பெரும்பாலும் செஞ்சி உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

 

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி மற்றும் திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார்.

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.