Advertisment

மின் வாரியம் அலட்சியம்... அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சலவைத் தொழிலாளி பலி

- thiruvarur -

திருவாரூர் அருகே உள்ள தென்னவராயன்நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (57). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மோகன் சலவைத் தொழிலாளி. ஆடு, மாடுகளை மேய்ப்பதையும் தொழிலாக கொண்டிருந்தார்.

Advertisment

நேற்று வழக்கம் போல் தனது ஆடுகளை அருகில் உள்ள வயலில் மேய்க்க சென்றுள்ளார் மோகன். அப்போது தவறுதலாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற அவரது நாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisment

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த இருபது தினங்களுக்கு மேல் வயல்வெளியில் மின்கம்பிகள் அறுந்து கிடக்கிறது. இதனை பலமுறை மின்சார ஊழியர்களுக்கும், மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிட்டுவிட்டோம். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. மின்சாரத்துறையினர் காட்டிய அலட்சியமே மோகனின் உயிரிழப்புக்கு காரணம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை மின்சார வாரியமும் அரசும் வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்." என கூறுகின்றனர்.

Thiruvarur wire Electrical Electricity Board'
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe