Coimbatore

Advertisment

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மின் கட்டண உயர்வைக்கண்டித்து 21ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்படும் என அறிவித்தார். அதன்படிகோவை பூசாரி பாளையத்தில் தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பினர்.

"வீட்டை விட்டு வெளியே போனால் அபராதம், வீட்டிற்குள்ளேயே இருந்தால் அநியாய மின் கட்டணமா?"

"கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்...கருணை இல்லாத எடப்பாடி அரசைக் கண்டிக்கிறோம்..."

Advertisment

கரோனா வைரஸை விட கொடூரமான அரசைக் கண்டிக்கிறோம் என தி.மு.க.வினர் முழக்கம் எழுப்பிய அடுத்த நொடியே லோக்கல் அ.தி.மு.க.வினர் சாலையில் நின்று எங்கள் எடப்பாடி அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? என செல்வபுரம் போலீஸிடம் பொங்கியுள்ளளனர்.

முழக்கம் எழுப்ப நின்ற திமுக இளைஞர்கள் கோவை அருண், பூவை நாகராஜ் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் செல்வபுரம் போலீசார்.