/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died_18.jpg)
திருச்சி திருவானைக்கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (51). இவர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பிரபல கோவிலில் மின் ஊழியராக பணியாற்றிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று (05.11.2021) கோவிலில் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி விஜயகுமார் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விஜயகுமார் மனைவி ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)