Electrical leakage from the freezer box; A shock at the house of mourning

இறந்தவர் உடலை வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் தாக்கி 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ளது மேல்காரப்பட்டு பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்தவர் லோகநாதன். விவசாயியான இவர் கடந்த தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு லோகநாதன் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி லோகநாதன் இன்று காலை உயிரிழந்தார். தொடர்ந்து அவரதுஉடலானது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisment

சடலத்தைவைக்கும் ஃப்ரீசர் பாக்ஸில் உடல் வைக்கப்பட்டிருந்தது. துக்க வீடு என்பதால் அவர்களுடைய உறவினர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். அப்போதுலோகநாதன் உடல் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸ் மீது மாலையிட்டு அஞ்சலி செலுத்த முயன்ற போது திடீரென ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் ஃப்ரீசர் பாக்ஸ் மீது கை வைத்து கை வைத்திருந்த உயிரிழந்த லோகநாதனின் மனைவி சாந்தி உள்ளிட்ட 12 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.