Advertisment

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு; தொழிலதிபர் உயிரிழப்பு

Electrical leakage in AC- businessman loss their live

Advertisment

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால்வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52). இவர் கட்டுமான தொழிலதிபராக இருந்த நிலையில், இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்று இரவு சுரேஷ்குமாரின் மகன் ஸ்டீபன்ராஜின் மனைவி சுஜிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சுரேஷ்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர். சுரேஷ்குமார் மட்டும் இரவு வீட்டிற்கு வந்து ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த அறையிலிருந்து புகை வந்ததைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத்தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்தகீழ்பாக்கம் மற்றும் கோயம்பேட்டைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுஅறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி இருந்தது.

Advertisment

சுரேஷ்குமார் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் ஏசியிலிருந்துமின் கசிவுஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

police incident Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe