சிட்லப்பாக்கத்தில் தெரு நாய்க்கு உணவு கொடுக்க வந்தவர் மீது சேதம் அடைந்த மின்கம்பம் விழுந்ததில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.

electric post damage

Advertisment

சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது. இவர் திங்கள்கிழமை இரவு தெரு நாய்க்கு உணவு அளிக்க வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவர் வசிக்கும் தெருவில் உள்ள ஏற்கனவே சேதமடைந்திருந்த சிமெண்ட் மின்கம்பம் திடீரென அப்போதுஅவர் மீது விழுந்துள்ளது. மின்கம்பம் விழுந்ததால் அதில் இருந்த கம்பிகளும் அறுந்து விழுந்தன. அப்போது மின்சாரம் அவர் மீது தாக்கியுள்ளது. இதனால் அவர் சத்தம் போட்டுள்ளார். சேதுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

Advertisment

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்தார். சிட்லப்பாக்கத்தில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்று பலமுறை மின்சார வாரியத்திடம் புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுவன் கிழே கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்து. சென்னையில் அதற்கு அடுத்த இரண்டாவது நாளிலேயே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.