
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை ஓரத்திலேயே மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பைபாஸ் சாலை பச்சையம்மன் கோவில் அருகே மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் இருக்கிறது. முக்கியசாலை பகுதியாக இருக்கக்கூடிய அந்த இடத்தில் இப்படி மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். இது தொடர்பாக பலமுறை மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும், புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.