Electric leakage in the motor kept to remove rainwater; Tragedy befell the two

சென்னை அடுத்த மாங்காட்டில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு வைக்கப்பட்டிருந்த மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு இருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை மாங்காடு அடுத்துள்ள மலையம்பாக்கம் ஊராட்சி பகுதியில் பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே மழைநீர் தேங்கி இருந்தது. தேங்கிய மழை நீரை அகற்றுவதற்காக அந்த பகுதியில் மின் மோட்டார் ஒன்று ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் மழை நீரில் கால் வைத்ததும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ந்த மற்றொரு பெண் அவருக்கு உதவும் முயன்ற போது அவரும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். மின் மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருவரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரு பெண்களும் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.