Electric bike explodes incident-tragedy in Vellore

Advertisment

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 Electric bike explodes incident-tragedy in Vellore

சின்ன அல்லாபுரம் பகுதியில் வசித்து வந்த கேபிள் ஆப்ரேட்டரான துரைவர்மா (49) எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுநள்ளிரவு எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு உறங்கிய நிலையில் பேட்டரி வெடித்துள்ளது. இதனால் அங்கு புகைமூட்டம் எழுந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இந்த விபத்தில் கேபிள் ஆப்ரேட்டர் துரைவர்மா அவரது மகள் மோகனப்ரீத்தி (13) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேட்டரி வெடித்ததில் ஏற்பட்ட புகைமூட்டத்தின் காரணமாக தந்தையும் மகளும் கழிவறையில் தஞ்சம் புகுந்த நிலையில், இருவரும் கழிவறைக்கு உள்ளேயே உயிரிழந்து கிடந்துள்ளனர். தற்பொழுது இருவரின் உடலும் கழிவறையிலிருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசாரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.