Advertisment

வாங்கிய இரண்டே நாளில் வெடித்த எலக்ட்ரிக் பைக்... போலீசார் விசாரணை!

Electric bike exploded on the second day of purchase ... Police investigation!

Advertisment

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன அல்லாபுரம் பகுதியில் வசித்து வந்த கேபிள் ஆப்ரேட்டரான துரைவர்மா (49) எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு உறங்கிய நிலையில் பேட்டரி வெடித்துள்ளது. இதனால் அங்கு புகைமூட்டம் எழுந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இந்த விபத்தில் கேபிள் ஆப்ரேட்டர் துரைவர்மா அவரது மகள் மோகனப்ரீத்தி (13) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேட்டரி வெடித்ததில் ஏற்பட்ட புகைமூட்டத்தின் காரணமாக தந்தையும் மகளும் கழிவறையில் தஞ்சம் புகுந்த நிலையில், இருவரும் கழிவறைக்கு உள்ளேயே உயிரிழந்து கிடந்துள்ளனர். தற்பொழுது இருவரின் உடலும் கழிவறையிலிருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசாரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Electric bike exploded on the second day of purchase ... Police investigation!

Advertisment

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த பைக் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாகனம் முழுமையாக எரிந்துசேதமடைடைத்துள்ளதால்அது எந்தவகை மாடல் எலக்ட்ரிக் பைக் என கண்டறிய முடியாததால் அந்த பைக்கை வாங்கிய ஷோ ரூமை போலீசார் நாடியுள்ளனர். பைக்கின் இயங்கு வேகம், சார்ஜ் போடவேண்டிய நேரம், பேட்டரியின் தன்மை உள்ளிட்டவை குறித்த தகவல்களைப் பெறும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

police incident Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe