Advertisment

9 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை!

Electoral code of conduct came into force in 9 districts!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கானஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு2 கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடைபெறும். 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு கடைசி நாள் செப்.22.வேட்புமனு மீதான பரிசீலனை செப்.23 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவைத்திரும்பப் பெற செப்.25 வரை அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை உடனே அமலுக்கு வந்துள்ளது. தற்பொழுது நடத்தைக்கு வந்துள்ள தேர்தல் விதி வரும் அக்.16 ஆம் தேதிவரைஅமலில் இருக்கும். 9 மாவட்டங்களுக்கு தனித்தனியாக 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். 41,500 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 40,000 போலீசார் ஈடுபட உள்ளனர். உள்ளாட்சித்தேர்தல் பணியில் சுமார் 1.10 லட்சம் பணியாளர்கள் பயன்படுத்தப்படுவர். காலை 7 மணிமுதல்6 மணிவரைவாக்குப்பதிவு நடைபெறும். கரோனாபாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணிமுதல்7 மணிவரைவாக்குச் செலுத்த அனுமதிக்கப்படுவர்.

local body election election commission
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe