நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போதுதமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 Election to Vellore constituency on 5th August

Advertisment

வரும் ஜூலை 11 முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம், ஜூலை18 ஆம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள், ஜூலை 19 மனுதாக்கல் மீது மறுபரிசீலனை, ஜூலை 22 மனுத்தாக்கலை திரும்பப்பெற கடைசி நாள், ஆகஸ்ட் 5 தேர்தல், ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என முக்கிய தேதிகளைதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் வேலூரில் அமலுக்கு வந்துள்ளது.

Advertisment