சென்னை, காளிகாம்பாள் கோவில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தலை நடத்த வழக்கறிஞரை தேர்தல் அதிகாரியாக நியமித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Advertisment

சென்னை, காளிகாம்பாள் கோவில் நிர்வாகத்தை கவனிக்க, 5 உறுப்பினர்கள் அடங்கிய அறங்காவலர் குழுவை, தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்றும், இந்த தேர்தலில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் 1935-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

Election of Trustees of Kalikambal Temple - Order to conduct the Hindu Religious Affairs Department!

தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், 1935-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தலை நடத்த உத்தரவிட கோரி மணி ஆசாரி என்பவர் சென்னை உயர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கறிஞர் பாஸ்கரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நிர்வாக அறங்காவலர்களும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி சுப்பையா மற்றும் நீதிபதி கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு, காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தலை அரசுதான் நடத்த வேண்டும் என்பதால், தேர்தல் நடத்த தகுதியான நபரை அரசுதான் நியமிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கறிஞரை தேர்தல் அதிகாரியாக நியமித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், முந்தைய காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment