எதிர்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிபடுத்தும் தேர்தல் வெற்றி: மு.க.ஸ்டாலின்

உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு குறித்து, திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தன் ட்விட்டர் பதிவில் கூறியதாவது,

மாபெரும் இடைத்தேர்தல் வெற்றிக்குக் காரணமான அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு வாழ்த்துகள். எதிர்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிபடுத்தும் முக்கியமான மைல்கல்லாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகியவையே என்றைக்கும் உயர்ந்தவை என்பதை பொதுமக்கள் மீண்டும் நிரூபித்து உள்ளனர்.

uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe