Advertisment

காஞ்சிபுரத்தில் 68 ரவுடிகள் மீது குண்டாஸ் - எஸ்.பி. தகவல் 

Election precautionary measures ... Kundas on 68 rowdies!

Advertisment

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலை ஒட்டி, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என நேற்று (03.03.2021) காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக தலைநகர் சென்னையில், 2,700க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.அதில் 500 துப்பாக்கிகள், வங்கி போன்ற நிறுவனங்களுக்குப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளன. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தைஅணுகி, தேர்தல் தேதிக்கு முன்பாக அவற்றை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 800-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் 68 ரவுடிகள் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு,கைது செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

police kanjipuram rowdy tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe