Skip to main content

தேர்தல் முடிந்தது...ரேஷன் அரிசி கடத்தல் தொடங்கியது...!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் சாலையோரம் உள்ள நிழற்கூடையில் கேட்பார்யின்றி சில மூட்டைகள் இருந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி செய்தியாளர் ஒருவருக்கு தகவல் தந்துள்ளனர்.

 

election over ...rice smuggling started ...!

 



அங்கு வந்து, அவர் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அது அரிசி சிப்பங்கள் என தெரியவந்துள்ளது. உடனே இதுப்பற்றி வாணியம்பாடி வட்டாச்சியர்க்கும், காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார். உடனே அவர்கள் சம்பவயிடத்திற்கு வந்துள்ளனர்.

முதலில் அந்தயிடத்துக்கு வந்த காவல்துறை அந்த அரிசி சிப்பங்களை ஒரு டாடா ஏசி வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று எடை போட்டது. அது 400 கிலோ என்பதும், அது ரேஷன் அரிசி என்பதும் தெரியவந்தள்ளது. அதனை கைப்பற்றிய போலீஸார், அதை கொண்டு வந்தது யார் ?. எதற்காக அங்கேயே விட்டு சென்றார்கள் என விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் என்பதால் கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் தடைப்பட்டு போயிருந்த ரேஷன் அரிசி கடத்தல் தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே மீண்டும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்'-துரைமுருகன் அதிரடி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
'Removal of Jaber Sadiq from DMK'-Duraimurugan takes action

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கை நிரந்தமாக நீக்கி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.