வேளச்சேரியில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரம் குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம்! 

Election official responds to the voting machine seized in Velachery!

நேற்று (06.04.2021) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று இரவு வேளச்சேரியில் (நந்தினி மருத்துவமனை அருகில்) 3 வாக்குப்பதிவு இயந்திரங்களைஸ்கூட்டரில் தூக்கிச் சென்றநபர்களைமடக்கிப்பிடித்தபொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதாகப் புகார் எழுந்த நேரத்தில், இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,சம்பந்தப்பட்ட நபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்தனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் வேளச்சேரியில்மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்அசன் மவுலானா வலியுறுத்தியுள்ள நிலையில், ஸ்கூட்டரில் தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்ததகவலை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல. பழுதான 2 விவி பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

tn assembly election 2021 velacherry
இதையும் படியுங்கள்
Subscribe