நெருங்கும் வாக்குப்பதிவு... இன்று மாலை தேர்தல் அதிகாரி சாஹு ஆலோசனை!

Election Officer Sahu meeting this evening!

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்துசட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கிவரும் நிலையில் இன்று (25.03.2021) மாலை 5 மணிக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. மண்டல தேர்தல் அலுவலர்களுடன் விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SatyaPradaSahu IAS tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe