தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 80 வயதிற்குமேற்பட்டோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்பட உள்ளது. 80 வயது முதியவர்கள், மாற்றுத்திறானளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வாக்களிப்பு மையத்திற்குச் சென்று வாக்களிக்க முடியாத காரணத்தால், அவர்கள் வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிப்பதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர்பிரகாஷ், நேற்று (05.03.2021) மயிலாப்பூர் ராமகிருஷ்ணாபுரத்தில் தொடங்கி வைத்தார்.மேலும் தபால் ஓட்டு அளிப்பதற்கு ஏதுவாக 12-டி படிவத்தை நேரில் சென்று வழங்கினார்.