தமிழகத்தில் விக்ரவாண்டியில் சட்டமன்ற தேர்தல் அறிவித்த உடன் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதுவரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திமுக, அதிமுக இரு பெரும் கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மதியம் 12 மணியளவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் சட்டத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி வி சண்முகம் உடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் திமுக மதியம் 1.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் மற்றும் ம.செ பொன்முடி உடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த உடனே அமைச்சர் சி வி சண்முகம் மற்றும் முத்தமிழ்ச்செல்வன் இருவரும் பிரச்சாரத்தை தொடங்கினர்.