புதுச்சேரி பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படுகிறது.
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆண்கள் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதனால் லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஏர்போர்ட் ரோடு மூடப்படுகிறது.இதேபோல் நாவலர் நெடுஞ்செழியன் மேல்பள்ளி ரோடு முதல் நாவற்குளம் சந்திப்பு வரையிலும், வள்ளலார் சாலையில் இருந்து உழவர்சந்தை வரையும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
போக்குவரத்து தடை இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் எண்ணிக்கை முடியும் வரை அமலில் இருக்கும் என்றும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்றுபாதையை பயன்படுத்துமாறும் புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.