Advertisment

திடீரென சங்கமித்த தென்னிந்தியத் தேர்தல் ஆணையர்கள்; நாடாளுமன்றத் தேர்தல் எப்போது?

nn

Advertisment

நாடாளுமன்றத்தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை இந்தியத்தேர்தல் ஆணையம் தற்போதேமேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் தீவு ஆகிய இடங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சென்னை நட்சத்திர விடுதியில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இதில் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியத்தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த துணைத்தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர ஷர்மா, முகேஷ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் சார்பில் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்றுள்ளார். தென்னிந்திய மாநிலங்களின் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மற்ற மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும், இந்த ஆலோசனைகளுக்குப் பின்னரே இந்தியத்தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

karnataka Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe