தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதானவர்கள் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், '80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்குத் தனியாகச் சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (23/12/2020) விசாரணைக்கு வருகிறது.
80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் தபாலில் வாக்களிக்கலாம் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சென்னையில் நேற்று (22/12/2020) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.