தமிழகத்தின் 39 மக்களவை தொகுதி மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களின் இறுதிபட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 845 பேர் போட்டியிடுகின்றனர். 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். மாநில கட்சிகள் சார்பில் 36 பேரும், இதர கட்சிகள் சார்பில் 46 பேரும், சுயேட்சைகள் 187 பேரும் போட்டியிடுகின்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் மத்திய சென்னையில் 11 பேர் போட்டியிடுகின்றனர். தென்சென்னையில் 40 பேர் போட்டியிடுகின்றனர். கரூரில் அதிகபட்சமாக 42 பேர் போட்டியிடுகின்றனர். நீலகிரியில் குறைந்தபட்சமாக 10 பேர் போட்டியிடுகின்றனர்.