Advertisment

அரவக்குறிச்சி நிலவரத்தை கூறாத தேர்தல் ஆணையம்!

இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மதியம் ஒரு மணி வரைக்கும் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் முன்னணியில் யார் என்று பதிவாகவில்லை.இதனால் எதிர் கட்சியினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.மேலும் தமிழகத்தில் பெரும்பலமான இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகித்து வருகின்றனர்.

Advertisment

senthilbalaji

byelection loksabha Aravakurichi senthilbalaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe