Advertisment

“தேர்தல் ஆணையம் பிரதமரிடம் விளக்கம் கேட்க பயப்படுகிறது” - தொல்.திருமாவளவன்!

Election Commission is afraid to ask the PM modi for an explanation says Thirumavalavan

Advertisment

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணுவாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு எந்திரம் அரியலூரில்வைக்கப்பட்டுள்ளது அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இது குறித்து விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சிசிடிவி கேமரா செயல் இழந்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் பாதுகாக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதனை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சிசிடிவி இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Advertisment

பிரதமர் மோடி அண்மை நாட்களாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதற்கான சான்றுகள் அவரது பேச்சில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசிய விவகாரத்தில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு மாறாக நட்டாவுக்கு அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்று புரியவில்லை.

தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது. ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் 5 கட்ட தேர்தலில் தேர்தல் கமிஷன் சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். வருகிற 9 ந் தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களைஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஜூன் 1ந் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதியில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். இது வரையில் அரசியல் வரலாற்றிலேயே அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் முதல்முறையாக அதுவும் ஒரு முதலமைச்சரை பொறுப்பில் இருப்பதை கெஜ்ரிவால் அவர்களை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

அதேபோல ஹேமன்சோரன் அவர்களும் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது ஒரு தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இந்த கைதுகள் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவைஏற்படுத்தாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.

NarendraModi Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Subscribe