தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தியதேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநிலதேர்தல் ஆணையம், புதுச்சேரி தேர்தல் ஆணையம்,நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள், அவற்றின் இடைத்தேர்தல்கள் ஆகியவை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி அமர்வில் மட்டுமே விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.