மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தி்ல் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தானகுமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி எம்.பி. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, கனிமொழி தரப்பு உச்சநீதி மன்றத்தை நாடியது. நேற்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர் மனுதாரர் சந்தானகுமார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.