தமிழகத்தில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் வேளையில், சில வேட்பாளர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே, இன்னும் 4 தினங்களில் தேர்தல் பரப்புரை நிறைவுபெற இருக்கிறது. வரும் 4ஆம் தேதி 5 மணியுடன் பரப்புரை நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூதெரிவித்துள்ளார்.