542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவது 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் நாளை மாலைக்கு பின்னரே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.