Elderly man dies after being attacked by a bear

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரடி தாக்கியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

தேனி ஆண்டிபட்டி அடுத்துள்ள சிதம்பரமவிலக்கு பகுதியில் வசித்து வந்தவர் சென்றாயபெருமாள். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். மளிகைக் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி ஒன்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சென்றாயபெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

உடனடியாக வெளியான தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அருகில் கரடியின் நடமாட்டம் இருந்ததற்கான கால் தடங்களையும் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது.