Advertisment

ஆடு மேய்க்க சென்ற முதிய தம்பதி மர்ம மரணம்; காங்கேயத்தில் மீண்டும் அதிர்ச்சி

An elderly couple who went to herd goats mysteriously lose their live; Another shock in Kangeyam

Advertisment

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முதிய தம்பதி காயங்களுடன் சடலமாகமீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அண்மையில் கொங்கு மண்டலமான பல்லடம் மற்றும் ஈரோடு சிவகிரி ஆகிய பகுதிகளில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் வசித்து வந்தவர்கள் வேலுச்சாமி-சாமியாத்தாள் என்ற வயது முதிர்ந்த தம்பதியினர். ஆடு மேய்க்க சென்ற நிலையில் திடீரென காணாமல் போயினர். தம்பதியின் மகன் வித்யாசாகர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்புவேறு சமூகத்தை சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தாய் தந்தையை காணவில்லை என தேடிச் சென்ற பொழுது இருவரும் காயமடைந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். இருவர் வாயிலும் விஷத்தன்மை கொண்ட தென்னை மருந்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகன் வித்யாசாகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார், அதேபோல இருவரின் உடலுக்கு அருகிலேயே அரிவாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளகோவில் போலீசார் இரண்டு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

திருப்பூர் காங்கேயம் பகுதியில் மீண்டும் ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Kangayam mysterious police thirupur
இதையும் படியுங்கள்
Subscribe