Advertisment

நாலு பிள்ளைகள்ல ஒன்னுகூட கஞ்சி ஊத்தல... விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை

Elderly couple

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே சு.நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். 75 வயதான கூலி தொழிலாளியான இவருக்கு 67 வயதான இருசம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முனியம்மாள் (47), நல்லான்கன்னி (43), சாவித்திரி (40) ஆகிய 3 மகள்களும், பஞ்சமூர்த்தி (45) என்ற மகனும் உள்ளனர்.

Advertisment

இவர்கள் அனைவருக்கும் ராமன் திருமணம் நடத்தி வைத்துள்ளார். நான்கு பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ராமன், இருசம்மாள் ஆகியோரை அவர்களது மகள்கள் மற்றும் மகன் வந்து பார்ப்பதில்லை. இவர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் கவனிப்பதில்லை. யாரும் கவனிக்காத நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதனால் ராமனும், இருசம்மாளும் மனமுடைந்து காணப்பட்டனர். அக்கம் பக்கத்தில் நாலு பிள்ளைகல்ல ஒருத்தருக்குகூட கஞ்சி ஊத்த மனசு வரலன்னு சொல்லி கவலைப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த விஷத்தை (பூச்சிமருந்து) எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது இவர்கள் அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்துள்ளது. உடனடியாக அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Elderly couple Suicide
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe