/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4541.jpg)
ஈரோட்டில் ஒற்றைக் காட்டு யானை தாக்குதலில் வயது முதிர்ந்த தம்பதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அவ்வப்போது வனத்தை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளாமுண்டி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன், துளசியம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதிகள் இருவர் வால்மொட்டைஎன்ற இடத்தில் சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது வனத்தின் புதர் மறைவில் இருந்த காட்டு யானை திடீரென ஓடிவந்து வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரையும் தாக்கியது. இதில் முதியவர் நஞ்சன் மற்றும் துளசியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு அவர்களது உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)