Elderly couple living alone beaten to death; 16 Sawaran jewelery theft

ஈரோட்டில் தனியாக தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியிடம் 16 சவரன் தங்கநகையை பறித்த மர்ம கும்பல், இருவரையும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது கரியங்காடு கிராமம். இந்த பகுதியை சேர்ந்த முத்துசாமி-சாமியாத்தாள் என்ற வயது முதிர்ந்த தம்பதிகள் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்குமூன்று மகள்கள் இருந்தனர். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் இவர்கள் தனியாக தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பேரன் அஜித் தாத்தா பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்த அஜித் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை காவல்துறையினர் வயதான தம்பதிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இரும்பு ராடு உள்ளிட்ட கொடூர ஆயுதங்கள் மூலம் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. சாமியாத்தாள் அணிந்திருந்த தாலி, நகை உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகள், ரொக்கமாக இருந்த 60 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. பணத்திற்காக தம்பதிகள் இருவரையும் மர்ம கும்பல் கொலை செய்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கொலையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment