நெல்லையில் வீட்டில் திருட வந்த கொள்ளையர்களை துரத்தியடித்த வயதான தம்பதிகள்... அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணபுரம் என்ற இடத்தில் வசித்து வரும்வயதான தம்பதிகளான சண்முகவேல் வயது 75, அவரது மனைவி செந்தாமரை வயது 65. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தசண்முகவேலைபின்னே இருந்து கொள்ளையன் ஒருவன்கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கிஇருக்கிறான்.

An elderly couple chasing robbers home in Nellai ... shocking CCTV footage

சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்து கொள்ளையனை கீழே கிடந்த பொருட்களால் தாக்க, இன்னொரு கொள்ளையனும்அந்த இடத்திற்கு வந்தான். இதனிடையே சேரைதூக்கி சண்முகவேல் கொள்ளையனை அடித்ததினால் கொள்ளையனின் பிடி தளர்ந்தது. சுதாரித்துக்கொண்ட சண்முகவேல் மேலும் கீழே கிடந்த பொருட்களை எடுத்து அவர்களைதாக்கினார்.செந்தாமரைக்குகாயம் ஏற்பட செந்தாமரை அணிந்திருந்த 35 கிராம் நகையைஅறுத்துக்கொண்டு வெளியே கொள்ளையர்கள் தப்பித்தனர்.இதனைத்தொடர்ந்து இரண்டு கொள்ளையர்களையும் தம்பதிகள் சேர்ந்து விரட்டினர்.

An elderly couple chasing robbers home in Nellai ... shocking CCTV footage

அவர்களது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் இக்காட்சிகள் அதில்தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த ஆதாரங்களுடன் அந்த தம்பதியினர் கடையம் காவல்நிலையத்தில்புகார் செய்துள்ளனர். ஆனால் காவல்நிலைய தரப்பினரோ விசாரித்ததில் வீட்டுக்குள் புகுந்தது அவருடைய உறவினர் என்று தெரியவருகிறது. இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்கிறார்கள்.

.

CCTV footage nellai Robbery
இதையும் படியுங்கள்
Subscribe