வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில்எஜமானியின் இறந்த உடலை தொடக்கூட விடாமல் நாய் நடத்திய பாசப் போராட்டம் அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz20_3.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திருப்பத்தூர் அடுத்தவெங்களாபுரம்பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவர் தனது வரவுக்கு மீறி கடன்களை பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் அல்லல்பட்டு வந்தார். இப்படியிருக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியான ராதா மற்றும் இரு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தனசேகர் தலைமறைவாகிவிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz19_3.jpg)
கணவர்தலைமறைவான நிலையில் அவரது மனைவி ராதா கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ராதாவிடம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த கஷ்டத்திலும் ராதா தனது வீட்டையும், தன்னையும், மகள்களையும்பாதுகாக்க நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்தராதா வீட்டில் யாரும்இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz14_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz17_2.jpg)
சம்பவமறிந்த திருப்பத்தூர் போலீசார் இதுகுறித்துவழக்குப்பதிவு செய்தநிலையில் ராதாவின் உடலை கைப்பற்றி உடல்கூறுஆய்வுக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அவரது சடலத்தை எடுக்க விடாமல் அவரது வளர்ப்பு நாய் அவரது சடலத்திற்கு அருகே அமர்ந்து கொண்டு பாசப் போராட்டம் நடத்தியது. ராதாவின் சடலத்திற்கு அருகே யார் சென்றாலும் குறைத்தது. உறவினர்கள் யாரும் துக்கம் விசாரிக்ககூட வராத நிலையில் தனது எஜமானியின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அவரை தொட விடாமலும், அவரை யாரும் நெருங்க விடாமலும் அந்த நாய்சுற்றி சுற்றி வந்தது காண்போரைகண்கலங்க செய்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz16_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz15_3.jpg)
பின்பு காவல்துறையின் ஆணையை ஏற்று ராதாவின் மகள் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்த நாயை இழுத்துச் சென்று சங்கிலியால் கட்டிப் போட்ட பிறகு அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மனிதநேயம் செத்துவிட்ட நிலையில் நன்றிஎன்ற சொல்லுக்கு மறு உருவமாக நிற்கிறது இந்த வாயில்லா ஜீவன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)