/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3621.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டனி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், மறைந்த திருமகன் ஈவேராவின் சகோதரருமான சஞ்சய் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஸ் போட்டியிட ஆர்வமாக இருந்த நிலையில், அவரது உடல்நலத்தை வைத்து போட்டியிட வேண்டாம் என அவரது குடும்பத்தினர் அவரை இரண்டு நாட்களாக வலியுறுத்தி வருவதால், தனது இளைய மகன் சஞ்சய்சம்பத்திற்கு வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் மேலிடத்தை இளங்கோவன் அனுகியுள்ளதாக தகவல் கிடைக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)